FAQs

  1. மொழி அனுசரணையாளர் என்போர் யார்?
    மொழி அனுசரணையாளர் என்பவர் இருமொழி அல்லது மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற ஒரு நபராவார். மொழிப் பாவனையில் ஏற்படும் தடைகளை தீர்த்துக்கொள்வதற்காக உங்களுக்கு உதவக்கூடியவராவார்.
  2. மொழி அனுசரணையாளரின் சேவையை பெற்றுக்கொள்ளக்கூடியவர்கள் யாவர்?
    எந்தவொரு அரச நிறுவனம், பிரஜைகள், தனியார் நிறுவனங்கள்,ஏதேனுமொரு சமூக அமைப்பு மற்றும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்.
  3. மொழி அனுசரணையாளர்களினால் வழங்கப்படும் சேவைக்கு கொடுப்பணவு வழங்க வேண்டுமா?
    ஆம். இலங்கை அரசினால் அனுமதிக்கப்பட்ட பெறுமதி
  4. இலங்கை அரசினால் அனுமதிக்கப்பட்ட பெறுமதி என்ன?
    ஒரு சொல்லுக்கான மொழி பெயர்ப்புக்கு ரூபா. 2.50
    எட்டு (08) மணித்தியால வேலைக்கு ரூபா. 1,000.00
    ஒப்பந்த அடிப்படையிலான ஒரு மாத வேலைக்கு ரூபா. 30,000.00
  5. மொழி அனுசரணையாளர் ஒருவரின் சேவையை எவ்வாறு பெற்றுக்கொள்வது?
    301 மொழி அனுசரணையாளர்களின் பெயர் மற்றும் தொடர்புத்தகவல்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
    ஓவ்வொரு மொழி அனுசரணையாளர்களினதும் மொழிப் புலமையும் குறிக்கப்பட்டுள்ளது.
    ஒருவர், சேவைக்கு அவசியமான மொழி இலகுபடுத்துநரை அடையாளம் கண்டு அவரை தொடர்பு கொள்ள முடியும்.
  6. மொழி அனுசரணையாளர் ஒருவராக வருவதற்கு ஏதேனும் வாய்ப்புக்கள் உண்டா?
    ஆம்.
    எவரேனும் ஒருவர் இரு மொழி அல்லது மும்மொழி புலமை பெற்றவராயிருப்பின் இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள பரீட்சையொன்றிற்கு தோற்றுவதற்காக தங்களை இணைய வாயிலாக பதிவு செய்து கொள்ள முடியும்.
  7. இந்த முன்முயற்சியினூடாக பிரஜைகள் எவ்வாறான பயணை பெற்றுக்கொள்ள முடியும்?
    பொது மக்களுக்கு அல்லது பிரஜைகளுக்கு அவரவரது மொழியில் சேவை வழங்குவதற்காக அரச நிறுவனங்களின் தலைமையதிகாரிகள் இம் மொழி அனுசரணையாளர்களின் சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
  8. மொழி அனுசரணையாளரின் சேவையை மதிப்பீடு செய்யக்கூடிய வகையிலான ஏதேனும் மதிப்பீட்டு முறைகள் உண்டா?
    ஆம். மொழி அனுசரணையாளரின் சேவையைப் பெற்றுக்கொண்ட நபர் அவரின் சேவை தொடர்பில் மதிப்பீடு செய்ய முடியும்.
FaLang translation system by Faboba