About Us

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம், மொழி வசதிகளை வழங்கும் குழாமின் இணையத்தளத்தை அறிமுகப்படுத்துகின்றது.

சகல பிரசைகளினதும் மொழி உரிமையை உறுதிப்படுத்தி அரச நிறுவனங்களுக்கு தகைமைகளை கொண்டுள்ள மொழிபெயர்ப்பாளர்களின் சேவைகளை வழங்குவதற்கு இயன்றவாறு, தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் மற்றும் அரசகரும மொழிகள் திணைக்களம் என்பன இணைந்து இருமொழி மற்றும் மும்மொழி வளப்பகிர்வாளர் குழாமிற்கான இணையத் தளமொன்றை அறிமுகப்படுத்துகின்றது.

தமது விருப்பமான மொழியில் அரச நிறுவனங்களுடன் தொடர்புகளை பேணிச்செல்வதற்கு பிரசைகளுக்குள்ள இயலாமை ஆறு தசாப்தங்களுக்கு மேலாக சவாலாக இருந்ததுடன், இந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்காகவும் சகல பிரசைகளினது கௌரவம், உரிமைகள் என்பன பாதுகாக்கும் வண்ணம் பணியாற்றும் பொருட்டு, இலங்கை அரசின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காகவும் அரச நிறுவனங்களுக்கு வழிகாட்டுவதற்கு இந்த நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களில் இரண்டு அரககரும மொழிகளிலும் பணியாற்றுவதற்கு முடியுமானவாறு தேவையான வசதிகளை வழங்குவதற்காக இருமொழி / மும்மொழி வளப்பகிர்வாளர் குழாமினை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை பரீட்சையின் பின்னர் அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் போட்டிப் 300 இருமொழி / மும்மொழி வளப்பகிர்வாளர்கள் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நிலைபேறான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு சட்ட ஆட்சி , அடிப்படை உரிமைகள், நியாயம், சமத்துவம் மற்றும் பல்வகைமை என்பவற்றுக்கு மதிப்பளிக்கும் சமூகத்தை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகமானது, இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு, அரசகரும மொழிகள் திணைக்களம் மற்றும் அரச நிர்வாக அமைச்சுடன் இணைந்து செயற்படுகின்றது.

அரச கரும மொழிகள் திணைக்களம் இந்த இருமொழி மற்றும் மும்மொழி வளப்பகிர்வாளர் குழாத்தினூடாக சேவைகளை வழங்கும்போது தரநியமங்களை பேணியும் அவ்வப்போது பெறுமதிகளை இணைத்தும் மொழி வசதிகளை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு அரச நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளது.

FaLang translation system by Faboba